விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த ராஜா அவர்களின் குடும்பத்திற்கு உதவிச் சென்ற மக்கள் சமூகநீதி கட்சி:

மக்கள் சமூகநீதி கட்சி நேரடியாக சென்று களப் பணிகளில்

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் உள்ள குறும்பப் பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜா வயது 29 அவர்களின் உயிரிழப்பிற்க்கு காரணம் பாலசமுத்திரம் ரோட்டில் உள்ள அரசு மதுக்கடைதான்,பல குற்றச் சம்பவங்கள் மற்றும் தெடர் விபத்தில் உயிரிழப்புகளும் மதுவினால் அந்த பகுதியில் நடந்து வருகிறது, ஆகையினால் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மதுக்கடையை உடனே முழுமையாக அகற்ற வேண்டும், இல்லையெனில் மக்கள் சமூகநீதி கட்சி அகற்றவும் தயங்காது! அகற்றும்!
இந்த மதுக் கடை குறும்பப் பட்டிக்கு அருகில் இருப்பதால், அங்குள்ள பொது மக்களுக்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர், அவ்வழியே செல்லும் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு போதை ஆசாமிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் சென்று வரும் நிலையில் உள்ளனர், பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது, மிகுந்த மண உலைச்சலுக்கு ஆளாகும் பெண் மற்றும் மாணவிகள், ஆளாகின்றனர்,
கடந்த 17/8/2020 அன்று இரவு சுமார் 7=20 மணிக்கு குறும்பப் பட்டியை சேர்ந்த ராஜா என்பவர் வரும் போது பாலசமுத்திரம் வழியாக சென்றுள்ளார், இருசக்கர வாகனத்தில், அதே வழியில் அரசு மதுக்கடை செயல்படுகிறது, வளைவு பகுதி என்பதால் வாகனங்கள் இருப்பதை அறிய முடியாத நிலை,
ராஜா அவர்கள் அவ் வழியாக வந்துள்ளார், மதுக்கடை முன்பே நடுரோட்டில் டிப்பர் லாரி ஒன்று நிறுத்தி விட்டு அதன் ஓட்டுனர் மதுபாட்டில்கள் வாங்க சென்றுள்ளார்,
ராஜா என்பவர் பின் பக்கம் லாரி இருப்பது தெரியாமல் லாரியின் பின் புறம் மோதியதில் ராஜா அவர்கள் உயிர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,இதை அறிந்த இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்ப்படுத்தியது, மக்கள் சமூகநீதி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தமிழ் மிகு. சாஸ்தா அவர்களும் மதுக் கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடந்துள்ளது, நியூஸ் 7, நாளேடுகளில் செய்தி வந்துள்ளது,
இறந்த ராஜாவின் குடும்பம் ஆதரவற்ற நிலையில் உள்ளது, ராஜா அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தை, ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது, அதோடு மணைவி ஆதரவற்ற நிலையில் தன் குழந்தைகளோடு இருக்கும் நிலை இனி யாருக்கும் வரக்கூடாது!
இதையெல்லாம் கவனித்த மக்கள் சமூகநீதி கட்சி நிர்வாகிகள் பழனியில் முகாமிட்டு இறந்த ராஜாவின் குடும்பத்திற்க்கு உதவி செய்யும் நோக்கில், கடந்த 20/8/2020 வியாழக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் தமிழ் மிகு சாஸ்தா மற்றும் அரசு போக்குவரத்து கழக நடத்துனர் தமிழ் மிகு. சத்திய மூர்த்தி இருவரின் முன்னிலையோடு,
மக்கள் சமூகநீதி கட்சியின் மாநில அமைப்பாளர் தமிழ் மிகு. செ கோவிந்தன், மாநில பொருளாளர் தமிழ் மிகு. சுமதி அக்கா, தருமபுரி மாவட்ட செயலாளர் தமிழ் மிகு. மகேஸ்வரன்,
திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தமிழ் மிகு.வேல்முருகன்,
தருமபுரி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ் மிகு. மாதப்பன், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றிய செயலாளர் தமிழ் மிகு.ராஜ்குமார், உணர்வோடு கலந்து கொண்டு தன் பங்களிப்பை செய்த தருமபுரி ஆல்பர்ட், இறந்த ராஜா அவர்களின் மணைவியின் அண்ணன் அவர்களோடு பழனி அருகே உள்ள நெய்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ( கோரிக்கை) மனுவை காவல் ஆய்வாளர் அவர்களிடம் மாவட்ட செயலாளர் வேல் முருகன் வழங்கினார்,
ராஜாவின் குழந்தைகளைப் பற்றியும் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் இருப்பதை ஆய்வாளர் அவர்களிடம் பேசினோம், இழப்பீடு வழங்க  உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள் என்று நாங்கள் பேசினோம். அவர்களும் எங்களால் ஆன உதவிகளை ராஜா அவர்களின் குடும்பத்திற்கு செய்வோம் என்று உறுதியாகக் சொன்னார்,
பிறகு பாலசமுத்திரம் ரோட்டில் உள்ள மதுக் கடையை விரைவாக அகற்றவேண்டும் இல்லையெனில் மக்கள் சமூகநீதி கட்சி போராட்டத்தின் வாயிலாக அகற்றவும் தயங்காது என்று காவல் ஆய்வாளர் அவர்களிடம் பேசினோம், குறும்பப் பட்டி பகுதியில் உள்ள மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்,
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ராஜாவின் மணைவி ஆதரவற்ற ராஜாவின் குழந்தைகளைப் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம், ராஜாவின் அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்துள்ளோம், உதவி தேவைப்படின் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று உறுதியளித்தோம்,
பிறகு புறப்பட்டு சென்றனர்,
கடைசி வரை ராஜாவின் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கடைசி வரை உதவி செய்த சாஸ்தா மற்றும் சத்திய மூர்த்தி அவர்களுக்கு நன்றிகளை மக்கள் சமூகநீதி கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

Popular posts from this blog

திருக்குறளை பொது மொழியாக அறிவிக்க முதல்வர் முயற்சிக்கு மக்கள் சமூகநீதி கட்சியின் மாநில அமைப்பாளர் செ கோவிந்தன் அவர்களின் ஆதரவு அறிக்கை:-

பழனி மலை அடிவாரத்தில் உள்ள குறும்பர் மடத்தை பார்வையிட்ட தருணங்களில்:-

தமிழகத்தில் தங்க மகன், தமிழகத்திற்கு பெருமை. தடகள வீரருக்கு மாநில அமைப்பாளர் தமிழ் மிகு செ கோவிந்தன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி:-