திருக்குறளை பொது மொழியாக அறிவிக்க முதல்வர் முயற்சிக்கு மக்கள் சமூகநீதி கட்சியின் மாநில அமைப்பாளர் செ கோவிந்தன் அவர்களின் ஆதரவு அறிக்கை:-
திருக்குறளை பொது மொழியாக அறிவிக்க முதல்வர் முயற்சிக்கு மக்கள் சமூகநீதி கட்சியின் மாநில அமைப்பாளர் செ கோவிந்தன் அவர்களின் ஆதரவு அறிக்கை:-
================================================
உலகத் தமிழ் மறை திருக்குறள்:
----------------------------------------------
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. இதில் "கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, அறம் வலியுறுத்தல்,
நீத்தார் பெருமை, இல்லறம், வாழ்வியல், துறவறம் ", அனைத்து நிலைகளையும் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் திருக்குறளில் இடம்பெறும் ஒரே நூல் திருக்குறள்,
உலக நாடுகளுக்கு முதல் மொழியாம் எம் தமிழ் மொழி என்றால் அது மிகையாகாது,
அப்பேற்பட்ட தமிழை தன் உயிராக நேசித்த ஒருவர் திருவள்ளுவர்,
1330 திருக்குறளை இயற்றிய சித்தர் ஆவார், கடவுள் நம்பிக்கையிலிருந்து, மனித வாழ்வியலில் இருந்து , தானம், தவம், உதவி, ஒழுக்கம், வாழ்வியல். இப்படி அனைத்தையும் தன் ஞானசக்தியால் உலக மக்களுக்கு தேவையான அனைத்து ஒழுக்கங்களையும், கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் வழிகளையும் தன் ஞானத்தால் எழுதிய தெய்வப்புலவராக விளங்குபவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆவார்,
இப்பேற்பட்ட உலக பொதுமறை நூலான திருக்குறளை உலக பொது நூலாக அறிவிக்க தமிழக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சி போற்றுதலுக்குரியது, வரவேற்கிறோம்.ஆனால் ஏதோ தேர்தல் வருவதை மனதில் கொண்டு செய்யும் செயலாக இருந்துவிடக் கூடாது, திருக்குறளை உலகம் முழுவதும் மக்கள் படிக்க வேண்டும், இதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து திருக்குறளை உலக பொது நூலாக அறிவிக்க வேண்டும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முயற்சி வெற்றியடைய மக்கள் சமூகநீதி கட்சி சார்பில் துணைநிற்கும், மக்கள் சமூகநீதி கட்சி சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்,
தமிழ் மிகு.
செ கோவிந்தன்,
மாநில அமைப்பாளர்,
மக்கள் சமூகநீதி கட்சி,
தமிழ் நாடு.