Posts

பழனி மலை அடிவாரத்தில் உள்ள குறும்பர் மடத்தை பார்வையிட்ட தருணங்களில்:-

Image
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள குறும்பர் மடத்தை சுற்றிப் பார்த்து விட்டு கீழே வந்தபோது, நுழைவாயிலில் செப்பேட்டில் உள்ளதை  தற்கால கல்வெட்டு மூலம் ஒட்டப் பட்டுள்ளதை பார்வையிட்டபோது, பழனியைச் சேர்ந்த மக்கள் சமூகநீதி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தமிழ் மிகு. சாஸ்தா அவர்களும். பழனியைச் சேர்ந்த மக்கள் சமூகநீதி கட்சியின் உறவினர் சத்திய மூர்த்தி அவர்களோடு, மாநில அமைப்பாளர் தமிழ் மிகு. செ கோவிந்தன், தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட செயலாளர் தமிழ் மிகு. மகேஸ்வரன், தருமபுரி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ் மிகு. மாதப்பன், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றிய செயலாளர் தமிழ் மிகு. ராஜ் குமார், தருமபுரி மாவட்டம் ஆல்பர்ட் அனைவரும் பழனி அடிவாரத்தில் குறும்பர் மடத்தில் பார்வையிட்ட தருணங்களில். 20/8/2020 அன்றைய நாளில்.

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த ராஜா அவர்களின் குடும்பத்திற்கு உதவிச் சென்ற மக்கள் சமூகநீதி கட்சி:

Image
மக்கள் சமூகநீதி கட்சி நேரடியாக சென்று களப் பணிகளில் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் உள்ள குறும்பப் பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜா வயது 29 அவர்களின் உயிரிழப்பிற்க்கு காரணம் பாலசமுத்திரம் ரோட்டில் உள்ள அரசு மதுக்கடைதான்,பல குற்றச் சம்பவங்கள் மற்றும் தெடர் விபத்தில் உயிரிழப்புகளும் மதுவினால் அந்த பகுதியில் நடந்து வருகிறது, ஆகையினால் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மதுக்கடையை உடனே முழுமையாக அகற்ற வேண்டும், இல்லையெனில் மக்கள் சமூகநீதி கட்சி அகற்றவும் தயங்காது! அகற்றும்! இந்த மதுக் கடை குறும்பப் பட்டிக்கு அருகில் இருப்பதால், அங்குள்ள பொது மக்களுக்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர், அவ்வழியே செல்லும் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு போதை ஆசாமிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் சென்று வரும் நிலையில் உள்ளனர், பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது, மிகுந்த மண உலைச்சலுக்கு ஆளாகும் பெண் மற்றும் மாணவிகள், ஆளாகின்றனர், கடந்த 17/8/2020 அன்று இரவு சுமார் 7=20 மணிக்கு குறும்பப் பட்டிய...

தமிழகத்தில் தங்க மகன், தமிழகத்திற்கு பெருமை. தடகள வீரருக்கு மாநில அமைப்பாளர் தமிழ் மிகு செ கோவிந்தன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி:-

Image
தமிழகத்தில் பிறந்த திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்கள் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்க்கும்.தமிழகத்திற்க்கும் பெருமையை தேடிகொடுத்தார், அவரின் சாதனையை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, இந்திய அரசு மாரியப்பன் அவர்களுக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான" கேல் ரத்னா" விருதிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்க்கு மேலும் பெருமை, மக்கள் சமூகநீதி கட்சியின் சார்பில் திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களையும். பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் மிகு. செ கோவிந்தன், மாநில அமைப்பாளர், மக்கள் சமூகநீதி கட்சி, தமிழ் நாடு.

திருக்குறளை பொது மொழியாக அறிவிக்க முதல்வர் முயற்சிக்கு மக்கள் சமூகநீதி கட்சியின் மாநில அமைப்பாளர் செ கோவிந்தன் அவர்களின் ஆதரவு அறிக்கை:-

திருக்குறளை பொது மொழியாக அறிவிக்க முதல்வர் முயற்சிக்கு  மக்கள் சமூகநீதி கட்சியின் மாநில அமைப்பாளர் செ கோவிந்தன் அவர்களின் ஆதரவு அறிக்கை:- ================================================ உலகத் தமிழ் மறை திருக்குறள்: ‌---------------------------------------------- தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. இதில் "கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, அறம் வலியுறுத்தல், நீத்தார் பெருமை, இல்லறம், வாழ்வியல், துறவறம் ", அனைத்து நிலைகளையும் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் திருக்குறளில் இடம்பெறும் ஒரே நூல் திருக்குறள், உலக நாடுகளுக்கு முதல் மொழியாம் எம் தமிழ் மொழி என்றால் அது மிகையாகாது, அப்பேற்பட்ட தமிழை தன் உயிராக நேசித்த ஒருவர் திருவள்ளுவர், 1330 திருக்குறளை இயற்றிய சித்தர் ஆவார், கடவுள் நம்பிக்கையிலிருந்து, மனித வாழ்வியலில் இருந்து , தானம், தவம், ...